தி சின்னர் (The Sinner)
இந்த தொடர் சாதாரண மக்கள் திடீரென ஏன் கொடூரமான கொலைகளை செய்கிறார்கள் என்பதை பற்றி ஆராயும் தொடர். ஒவ்வொரு சீசனிலும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் குற்றங்கள் மற்றும் அதை ஏன் செய்தார்கள் என்பதை துப்பறியும் விதமாக நகர்கிறது கதை.
பொதுவாக படங்கள் அல்லது சீரியல்கள் யார் கொலை செய்தார்கள் என்பதை சுற்றி நகரும். ஆனால் இந்த சீரியல் ஏன் கொலை செய்தார்கள் என்பதை சுற்றியே நகரும்.
Season - 1 ( Cora )
கொரா ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை.
ஒரு நாள் கடற்கரைக்கு சுற்றுலா செல்கின்றனர்.
அங்கு இன்னொரு குழு பாடல் ஒலிக்க செய்து நடனமாடி மகிழ்ச்சியாக உள்ளனர்.
அந்த பாடலை கேட்க கேட்க கொரா விற்குள் ஏதோ மாற்றம் நிகழ்கிறது. கையில் இருந்த பழம் வெட்டும் கத்தியை வைத்து அந்த குழுவில் உள்ள ஒருவனை கொடூரமாக குத்தி கொன்று விடுகிறாள். கடற்கரையில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.
கொரா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் படுகிறார். குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் ஆனால் ஏன் கொலை செய்தாள் என்று அவருக்கே தெரியவில்லை என்கிறார்.குற்றத்தை ஒப்பு கொண்டதால் சிறைக்கு அனுப்பப்படுகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஹாரி அம்ப்ரோஸ் இந்த வழக்கில் ஏதோ ஒரு மர்மம் உள்ளதை உணர்கிறார்.
வழக்கை தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கிறார். கொரா வின் கடந்த காலத்தை தோண்டும் போது பல திடிக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. முடிச்சுகள் ஒவ்வோன்றாக விடுபடுகின்றது.
நடிப்பை பொறுத்தவரை கொராவாக Jessica Biel அருமையாக நடித்துள்ளார். துப்பறியும் போலீஸ் அதிகாரியாக Bill Pullman மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Season - 2 (Julian)
தொடரோட ஆரம்பமே பயங்கரம். ஒரு சிறுவன் அவனோட பெற்றோர்களை ஒரு ஹோட்டலில் வைத்துக் கொன்று விடுகிறான்.
போலீஸ் விசாரணையில் ஆமா நான் தான் கொன்றேன் என ஒத்துக் கொள்கிறான்.
இந்த கேஸ்ல ஏதோ மர்மம் இருக்கிறது என நினைக்கும் ஹீரோ விசாரணையில் இறங்குகிறார்.
விசாரணையில் அந்த சிறுவன் பக்கத்தில் உள்ள ஒரு Cult ஐ சேர்ந்தவன் என்று தெரியவருகிறது.
விசாரணையில் ஏன் கொலை செய்யும் அளவுக்கு ஆனான் என்பதை சொல்கிறது.
2 சீசன் முழுவதும் மர்மமாகவே நகர்கிறது. யாரும் யூகிக்க முடியாத பல திருப்பங்கள் நிறைந்த தொடர்.
இது பரபரப்பான தொடர் கிடையாது. ஆனால் பல திருப்பங்கள் நிறைந்த ஆர்வத்தை தூண்டும் தொடர்.
இது ஒரு புதுமையான தொடர்.. கண்டிப்பாக பாருங்கள்.
நெட்ஃபிளிக்ஸ்ஸில் உள்ளது: https://www.netflix.com/title/80175802?s=a&trkid=13747225&t=cp
கருத்துகள்
கருத்துரையிடுக