பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் (Person Of Interest) Review In Tamil
க்ரைம் வகையை சேர்ந்த தொடர்களில் எனக்கு பிடித்ததில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் The Mentalist
IMDb 8.5
5 Seasons , 103 Episodes
ஒரு பணக்கார சாஃப்ட்வேர் (Herold Finch)இன்ஜினியர் ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் உருவாக்குகிறார். இது உலகத்தில் உள்ள CCTV கேமராக்கள், தொலைபேசி உரையாடல்கள், SMS என அனைத்து வகையான தகவல் பரிமாற்றத்தையும் ஆராய்ந்து தீவிரவாத நடவடிக்கைகளை முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்கும் ஆற்றல் படைத்தது.
இது நாட்டில் நடக்க இருக்கும் வன்முறை சம்பவங்கள் குறித்து தகவல் தரும் ஆற்றல் பெற்றது ஆனால் அரசு தீவிரவாத நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
அதனால் Herold Finch (Michael Emerson) அந்த சிஸ்டத்தில் சின்ன மாற்றம் செய்கிறார் . குற்ற செயல்களில் தொடர்புடையவரகளின் Social Security number ஐ அவருக்கு மட்டும் அனுப்புமாறு செய்து விடுகிறார். அது குற்றம் செய்ய போறவராக இருக்கலாம் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள நபராக இருக்கலாம்.
Ex CIA ஏஜன்ட் (John Reese) கதாபாத்திரத்தில் (Jim Cavizel) Herold Finch டம் வேலைக்கு சேருகிறார்.இருவரும் இணைந்து குற்றம் நடக்கும் முன் மககளை காப்பாற்றுகிறார்கள்.
இதற்கு நடுவில் அரசாங்கம், காவல் துறை, சிஸ்டத்தை அடைய நினைக்கும் வில்லன் கோஷ்டி, இதை விட சக்தி வாய்ந்த சமாரிடன் சிஸ்டம் என பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொடர்.
ரூட் (root) கதாபாத்திரம் சிறப்பான ஒன்று. வில்லியாக அறிமுகமாகி பின்னர் மனது மாறி நல்லது செய்யும் கூட்டத்தில் சேர்கிறார்..
சமீன் கதாபாத்திரம் முக்கியமான மற்றும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான பல காட்சிகள் உள்ளன எடுத்துக்காட்டாக வில்லன் கோஷ்டி எல்லாரையும் சிறை பிடித்து நாற்காலியில் கட்டி வைத்து மிரட்டும் போது எவ்வாறு தப்பிப்பார்கள் என யோசிக்கும்போது இவர்களை பழைய Fax மெஷின் மூலம் சிஸ்டம் காப்பாற்றுவது எதிர்பாராத ஒன்று.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்களில் இதற்கு கண்டிப்பாக இடம் உண்டு.
இந்த தொடர் உருவாக்கத்தில் Jonathan Nolan (நோலன் சகோதரர்களில் ஒருவர்) முக்கியமான பங்காற்றி உள்ளார்.
Watch Trailer:
Directors: Chris Fisher, Richard J. Lewis, Frederick E.O. Toye, Jeffrey G. Hunt, Stephen Surjik
Writer: Jonathan Nolan
Starring: Jim Caviezel, Michael Emerson, Kevin
Chapman, Amy Acker, Taraji P. Henson
Producers: Jonathan Nolan, J.J. Abrams, Bryan Burk
Ott
பதிலளிநீக்குPrime Video
பதிலளிநீக்கு