ஃபௌடா (Fauda) - சீசன் (Season 1)
இது இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்த தொடர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் பாலஸ்தீன புரட்சியாளர்களுக்கும் நடுவே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர்.
இஸ்ரேல் சிறப்பு படை அபு அகமத் என்ற தீவிரவாதியை பல ஆண்டுகளாக தேடி வருகின்றனர். இவன் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் அதிகாரகள் மற்றும் பொது மக்கள் உயிர் இழப்புக்கு காரணமாய் உள்ளவன். ஒரு கட்டத்தில் அவன் தம்பியின் திருமணத்தில் கலந்து கொள்ள வருகிறான் என்று தகவல் கிடைக்கிறது. இவனை ஃபான்த்தர் (Panther) என்று சக தீவிரவாதிகள் அழைக்கின்றனர்.
தொடரின் நாயகனான டொரோன்(Doron) இஸ்ரேல் சிறப்பு படை பிரிவின் முன்னாள் அதிகாரி. ஃபான்த்தரை நேரில் பார்த்த மிகச் சிலரில் இவனும் ஒருவன் .
திருமணத்தில் மாறுவேடத்தில் புகுந்து ஃபான்த்தரை கொல்ல இஸ்ரேல் சிறப்பு படை திட்டமிடுகிறது. இதில் டொரோன்னும் இணைந்து கொள்கிறார்.
எளிதாக முடியும் என நினைத்த ஆப்பரேஷன் நொடியில் ரத்தக்களரியாக மாறி விடுகிறது. நடந்த கலவரத்தில் மணமகனான ஃபான்த்தரின் தம்பி இஸ்ரேல் சிறப்பு படையால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
இஸ்ரேல் படை அங்கிருந்து எந்த சேதாரமும் இன்றி தப்பி விடுகின்றனர். ஆனால் இந்த தாக்குதல் தொடர்ச்சியான பல நிகழ்வுகளை தூண்டுகிறது.
இது தனிப்பட்ட தாக்குதலாக கருதப்பட்டு ஃபான்த்தர் மற்றும் அவன் தம்பியின் இளம் விதவை இஸ்ரேல் சிறப்பு படை மற்றும் டொரோனை பழி வாங்க கிளம்புகிறார்கள்.
இந்த புள்ளியிலிருந்து இரண்டு குழுக்கள் இடையே எலி மற்றும் பூனை துரத்தலாக மாறி விடுகிறது.
இருதரப்பிலும் பல இழப்புகளுடன் பல திருப்பங்களுடன் செல்கிறது கதை.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தொடர் ஆனால் எடுக்கப்பட்ட விதம் மற்றும் நடிப்பு அருமை. ஆக்ஷ்ன் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் சிறப்பு.
மற்றும் அனைத்து காட்சிகளும் இயல்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷ்ன் படம் மற்றும் சீரிஸ் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
நெட்ஃபிளிக்ஸ்ஸில் உள்ளது / Available in Netflix : https://www.netflix.com/title/80113612?s=a&trkid=13747225&t=cp
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக