க்ராவ்ல் (Crawl) - 2019
இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிருகத்தின் இடமிருந்து தப்பிப்பது பற்றிய திரைப்படம்.
நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையாக வருகிறார்.ஒரு நாள் அவருடைய அக்கா ஃபோன் செய்து அவர்களுடைய அப்பா ஃபோன் எடுக்கவில்லை என்றும் கடுமையான புயல் வருவதால் பயமாக உள்ளது என்கிறார்.
நாயகி நேரில் சென்று பார்க்க முடிவு செய்து கிளம்புகிறார். அதே சமயம் புயலும் கடுமையாக வீச ஆரம்பிக்கிறது.
ஒருவழியாக அவர் வசிக்கும் இடத்தை அடைகிறார். ஆனால் அவர் அங்கு இல்லாத நிலையில் அவர் வளர்க்கும் நாயை (சுகர் அதன் பெயர்) அழைத்துக்கொண்டு இன்னொரு வீட்டில் தேட செல்கிறார்.
சுகரின் உதவியோடு வீட்டின் அடிப்பாகத்தில் அடிபட்ட நிலையில் அப்பாவை கண்டுபிடிக்கிறார். வீட்டின் அடிப்பகுதியில் ஊர்ந்து செல்லும் அளவிற்கு தான் இடம் உள்ளது.
காப்பாற்ற முயற்சி செய்யும் நேரத்தில் ஒரு பெரிய முதலை இவர்களை விரட்டுகிறது. அதனிடம் இருந்து தப்பி ஒரு தாழ்வான வயர்கள் மற்றும் குழாய்கள் சூழ்ந்த பகுதியில் அடைக்கலம் ஆகின்றனர். தடைகளை தாண்டி முதலைகளால் இவர்களை நெருங்க முடியவில்லை.
இந்நிலையில் புயல் மழை காரணமாக தண்ணீர் உள்ளே வர ஆரம்பிக்கிறது.
எதிரேயுள்ள கடையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கும்பல் கொள்ளை அடிக்கிறது. நாயகி அவர்களிடம் காப்பாற்றுமாறு சொல்கிறார். ஆனால் இந்த குழு பரிதாபமாக முதலைகளுக்கு இரையாகின்றனர் .
யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் எப்படி தந்தையும் மகளும் தப்பினாரகளா என்பது பர பரபரப்பான மீத படம்.
Alexandre Aja இயக்கி உள்ளார். Piranha , Hills have eyes வரிசையில் மற்றுமொரு திகில் திரைப்படம்.
இது சராசரியான மிருக படம்... புதிதான அம்சங்கள் எதுவும் இல்லை. பல இடங்களில் லாஜிக் மீறல்கள். உதாரணமாக நாயகி இரண்டு முறை முதலையிடம் மாட்டி கடி வாங்கி தப்பிக்கிறார். ஆனால் காயங்களுடன் நீச்சல் அடித்து முதலைகளிடம் தப்பித்து செல்கிறார்.
மிருகங்கள் பற்றிய படங்கள் பிடிக்கும் என்பவர்கள் தாரளமாக பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக