தி சேசர் (The Chaser ) Korean Movie Tamil Review
தி வெய்லிங் படம் பார்த்த பின் அந்த பட இயக்குனர் எடுத்த மற்ற படங்களை பார்க்கும் ஆர்வம் வந்து பார்த்த திரைப்படம் தான் தி சேசர்
இது ஒரு சீரியல் கில்லரை பிடிப்பதை பற்றிய பரபரப்பான கொரியன் திரைப்படம்.
ஹீரோ முன்னாள் துப்பறிவாளர் ஆனால் இப்போது பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு புரோக்கர். தொடர்ச்சியாக அவனிடம் வேலை செய்யும் சில பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அதனால் பணக்கஷ்டத்தில் இருக்கிறான்.
ஒரு கஸ்டமரிடம் இருந்து பெண் வேண்டும் என அழைப்பு வருகிறது. தன்னிடம் மிச்சம் உள்ள பெண்களில் ஒருவரை அனுப்புகிறான்.
அனுப்பிய சிறிது நேரத்தில் காணாமல் போன அனைத்து பெண்களும் அந்த கஸ்டமரிடம் தான் கடைசியாக சென்று உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கிறான்.
அந்த கஸ்டமரை கணடு பிடிக்க தானகவே விசாரணையில் இறங்குகிறான். ஒரு சிறிய விபத்தில் அந்த கஸ்டமரை கண்டுபிடிக்கிறான். அப்போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாக போலீஸ் இருவரையும் கைது செய்கிறது.
.
விசாரணையில் அந்த கஸ்டமர் ஒரு சீரியல் கில்லர் மற்றும் 12 பெண்களே கொன்று இருக்கிறான் என்பது தெரிய வருகிறது. கடைசி பெண் உயிருடன் இருக்க வாய்ப்பு உண்டு என்று சொல்கிறான்.
அவர்கள் நாட்டு சட்டப்படி 12 மணி நேரத்திற்குள் ஆதாரங்கள் இல்லை என்றால் அவனை விடுதலை செய்ய வேண்டும்.
ஹீரோ அப்பெண்ணை காப்பாற்ற கிளம்புகிறான். போலிஸ் ஆதாரங்கள் திரட்ட கிளம்புகிறது.
ஹீரோ அப்பெண்ணை காப்பாற்றினானா , போலீஸ் ஆதாரங்கள் திரட்டி அவனை சிறைக்கு அனுப்பியதாக என பரபரப்பாக செல்கிறது படம்.
படம் பரபரப்பாக சென்றாலும் ஆங்காங்கே நகைச்சுவை வசனங்கள் வருகிறது. காணாமல் போன பெண்ணின் மகளுடன் ஹீரோ வரும் சென்ட்டிமென்ட் காட்சிகள் நன்றாக உள்ளது.
துரத்தல் மற்றும் சண்டைக்காட்சிகள் இயல்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
மிக அருமையான திரைப்படம். ஹீரோயிசம் கலந்த பரபரப்பான தோட்டாக்கள் பறக்கும் திரில்லர் திரைப்படம் தான் பிடிக்கும் என்பவர்கள் இத்திரைப்படத்தை தவிர்க்கவும்.
Really a good thriller. Great performance by Hero and Villain.
பதிலளிநீக்கு