தி பிளாக் லிஸ்ட் ( The Blacklist )

தி பிளாக் லிஸ்ட் (The Blacklist) 


இது ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ். முதல் எபிசோட் ஆரம்பமே அதிரடியாக இருந்தது. அப்பொழுதே அனைத்து சீசன்களையும பார்ப்பது என்று முடிவு செய்து விட்டேன்.

மொத்தம் 7 சீசன்கள் ஒவ்வொரு சீசனுக்கும் சுமாராக 20 எபிசோட்கள முதல் எபிசோட் ஆரம்பத்தில் டிப் டாப்பாக உடை அணிந்த நபர் ஒருவர் FBI அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு உள்ள ரிஷப்சன் பெண்ணிடம் தன் பெயர் ரேமண்ட் ரெட்டிங்டன் எனவும் சீஃப் ஆபிஸரை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த பெண் அவர் பெயரை கணினியில் என்டர் செய்கிறார். கணினி திரையில் அவருடைய தகவல்கள் தெரிகிறது. உடனே பரபரப்பாகி பீதியுடன் அபாய அறிவிப்பை அலற விடுகிறார். நிறைய போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியுடன் வருகின்றனர். ரேமண்ட் ரெட்டிங்டன் கூல்லாக சரணடைய தயாராகிறார். கேமரா நோட்டிஸ் போடை காட்டுகிறது அதில் ரேமண்ட் ரெட்டிங்டன் பெயர் புகை படத்தோடு தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. 20 வருடங்களாக அமெரிக்கா அரசாங்கத்தினால் தேடப்படும் மிக முக்கியமான குற்றவாளி தான் அவர். 

திரை மறைவில் இருக்கும் மற்றும் அமெரிக்க அரசுக்கு கூட தெரியாத குற்றவாளிகளை கைது செய்ய உதவுகிறேன் என்கிறார். அதற்கு கைமாறாக 2 கோரிக்கைகளை வைக்கிறார். 

 1. அவர் மீது உள்ள குற்றங்களை தள்ளுபடி செ ய்ய வேண்டும், கைது செய்யக்கூடாது. 
2. தான் எலிசபெத் கீன் (Elizabeth Keen) எனும் ஒரே ஒரு அதிகாரியிடம் மட்டுமே பேசுவேன் என்கிறார். 

 இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எலிசபெத் அன்று தான் FBI-ல் வேலைக்கு சேரப்போகும் அதிகாரி. 
 
 அவரின் கோரிக்கையை ஏற்று கொள்கிறது. காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு குற்றவாளியாக தனது பட்டியலில் இருந்து போலீஸக்கு தகவல் தருகிறார். அந்த பட்டியலே The Blacklist. 

இதற்கு நடுவில் யார் இந்த எலிசபெத் கீன் அவருக்கும் ரெட்டிங்டன்க்கும் என்ன தொடர்பு என சுவாரஸ்யமாக செல்கிறது கதை. கொஞ்சம் கொஞ்சமாக எலிசபெத் கதாபாத்திரத்தின் பின்னணி தெரிவு போல இருப்பதும் ஆனால் ரெட்டிங்கன் அதை அப்படியே மாற்றி தியரி சொல்வதும் எலிசபெத் கதாபாத்திரம் மற்றும் ரெட்டிங்டன் கதாபாத்திரங்களை மர்மமாகவே வைத்து சஸ்பென்ஸ்ஸை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. 

 ஜேம்ஸ் ஷ்பாடர் ,ரெட்டிங்டன் கதாபாத்திரத்தில் அதகளம் பண்ணியிருக்கார்.சண்டை காட்சிகள், சென்டிமென்ட்  காட்சிகள் என அனைத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் . சண்டைக் காட்சிகளில் செம ஸ்டைலாக மற்றும் கூலாக உள்ளார். 

மொத்த சீரிஸ்யும் தனி ஆளாக தாங்கி பிடித்து உள்ளார். 


 சில எபிசோட்கள் மெதுவாக நகர்கின்றன.நிறைய காட்சிகள் நாமே அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடிகிறது. மற்றபடி பெரிய குறைகள் ஒன்றும் இல்லை.

நல்ல டைம் பாஸ் .IMDb Rating : 8.0/10

Netflix ல் கிடைக்கிறது.

Directors: Michael W. Watkins, Andrew McCarthy, Steven A. Adelson, Karen Gaviola, Donald E. Thorin Jr.
Writer: Jon Bokenkamp
Starring: James Spader, Megan Boone, Diego Klattenhoff, Harry Lennix, Hisham Tawfiq

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்