ஃபௌடா (Fauda) - சீசன் (Season 1) இது இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்த தொடர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர். இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் பாலஸ்தீன புரட்சியாளர்களுக்கும் நடுவே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர். இஸ்ரேல் சிறப்பு படை அபு அகமத் என்ற தீவிரவாதியை பல ஆண்டுகளாக தேடி வருகின்றனர். இவன் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் அதிகாரகள் மற்றும் பொது மக்கள் உயிர் இழப்புக்கு காரணமாய் உள்ளவன். ஒரு கட்டத்தில் அவன் தம்பியின் திருமணத்தில் கலந்து கொள்ள வருகிறான் என்று தகவல் கிடைக்கிறது. இவனை ஃபான்த்தர் (Panther) என்று சக தீவிரவாதிகள் அழைக்கின்றனர். தொடரின் நாயகனான டொரோன்(Doron) இஸ்ரேல் சிறப்பு படை பிரிவின் முன்னாள் அதிகாரி. ஃபான்த்தரை நேரில் பார்த்த மிகச் சிலரில் இவனும் ஒருவன் . திருமணத்தில் மாறுவேடத்தில் புகுந்து ஃபான்த்தரை கொல்ல இஸ்ரேல் சிறப்பு படை திட்டமிடுகிறது. இதில் டொரோன்னும் இணைந்து கொள்கிறார். எளிதாக முடியும் என நினைத்த ஆப்பரேஷன் நொடியில் ரத்தக்களரியாக மாறி விடுகிறது. நடந்த கலவரத்தில் மணமகனான ஃபான்த்தரின் தம்பி இஸ்ரேல் சிறப
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil