Prehistoric Planet Tamil Review - 2022 66 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி டைனோசர்கள் மற்றும் அதோடு வாழ்ந்த விலங்குகளின் உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும் Documentary Series இது. IMDb 8.5 Episodes 5 Tamil Subs ✅ கடல், பாலைவனம், நல்ல தண்ணீர்,ஐஸ் மற்றும் காடுகளில் இவற்றின் வாழ்கையை சொல்லும் தொடர். Apple Tv + தயாரிப்பில் பிரபலமான David Attenborough குரலில் வெளிவந்ததுள்ளது . இருக்குற எல்லா டெக்னாலஜி, கற்காலத்தை பற்றிய ஆராய்ச்சிகள், கற்பனைத்திறன் என எல்லாவற்றையும் கலந்து ஒரு பக்காவானா தொடரை கொடுத்து இருக்கிறார்கள். ஜிராஸிக்பார்க் படங்கள் மற்றும் இன்ன பல படங்களில் காட்டப்பட்ட டைனோசர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்து இருக்கும் என்பதை டெக்னாலஜி உதவியுடன் கொடுத்து இருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் Hans Zimmer ன் இசை. பிண்ணனி இசை செமயாக உள்ளது. நல்ல சவுண்ட் சிஸ்டம் உடன் பார்ப்பது சிறப்பு. David Attenborough அவர்களின் குரல் இன்னொரு பெரிய ப்ளஸ். கண்டிப்பாக குழந்தைகளுடன் பாருங்கள் 👍 Highly Recommended 🔥🔥🔥🔥🔥 Don't miss it.
சமீபத்தில் பார்த்த தொடர்களில் ரொம்பவே சிறப்பான தொடர் இது. IMDb 8.6 8 Episodes Available @Hotstar மருந்து என்ற பெயரில் போதைப் பொருளை விற்பனை செய்யும் பார்மா கம்பெனியால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை சொல்லும் தொடர். அமெரிக்காவில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர். Purdue Pharma என்னும் ஒரு மிகப்பெரிய மருந்து கம்பெனி வலி நிவாரணி மாத்திரையை அறிமுகம் செய்கிறது. அதில் Opioid எனப்படும் போதைப் பொருள் கலந்து உள்ளதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஆனால் இந்த மருந்துக்கு அடிமையாகும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஆனால் இதை எல்லாம் திறமையாக மறைத்து , வேறு வேறு பெயர்கள் சொல்லி விற்பனை செய்கிறார்கள். இதனை மருந்து என வாங்கி சாப்பிட நோயாளிகள் அவர்களை அறியாமல் போதைக்கு அடிமை ஆகிறார்கள். இந்த மருந்துக்கு அடிமையான சுரங்கத் தொழிலாளியான இளம்பெண் Betsy. அவருக்கு அந்த மாத்திரையை தெரியாமல் பரிந்துரை செய்த அந்த ஊர் டாக்டர் என ஒரு கிளை கதை போகிறது. இன்னொருபுறம் இந்த மருந்தின் வீரியத்தை உணர்ந்து தனி ஆளாக இதை தடை செய்ய போராடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த பெண் அதிகாரி . மூன